×

உலக நாடுகளின் பெருநகரங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து அரசு போராடி கொண்டிருக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்குமே கொரோனா பாதிப்பு உள்ளது. ரத்தம், செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரசாக உள்ளது கொரோனா. உலக நாடுகளின் பெருநகரங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது. பிரான்ஸ் (15%), இத்தாலி (14%), இங்கிலாந்து (14%) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம்  0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Minister Vijayabaskar ,cities ,world cities , Tamil Nadu, Death Rate, Minister Vijayabaskar
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...