×

புலம் பெயந்த தொழிலாளர்களிடம் பேருந்து, ரயில் கட்டணத்தை வசூலிக்க கூடாது; செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்...உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் தங்குமிடத்தை உடனே ஏற்படுத்தித் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்க கூடாது. அதற்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை உருவானது மத்திய, மாநில அரசுகளின் தோல்வி அடைந்து விட்டது என உச்சநீதிமாற்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் புலம்பெயந்த தொழிலாளர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக குறித்து விரிவான அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட பிறப்பித்துள்ளது. ரயில் கட்டண செலவை மாநிலங்களே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களே உணவு, தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் ரயில் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : migrant workers ,state governments ,Supreme Court ,Supreme Court Directive , Migrant workers, bus, train fare, Supreme Court
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...