×

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு

போபால்: கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு முடிவு செய்துள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசமும் உள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 56,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,897 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 17,918 பேர்   குணமடைந்துள்ளனர். அந்த வரிசையில் மத்தியப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7261-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 313 பேர் உயிரிழந்த நிலையில் 3927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அந்த மாநிலத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்படி, கொரோனா பாதிப்பு சிறிதளவு இருப்பவர்களும், அறிகுறி சந்தேகம் இருப்போரும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுபோல தனிமைபடுத்தப்பட்டோர் விதியை மீறி, சுற்றி திரிவது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முடிவு கட்டும் வகையில், தனிமைபடுத்துதல் விதியை முதன்முறையாக மீறுவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், 2ஆவது முறையாக மீறினால் வீட்டில் இருந்து தனிமை முகாமுக்கு மாற்றும் நடவடிக்கையை எடுக்கவும் மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

Tags : state government ,Madhya Pradesh , Madhya Pradesh, Isolation, Fines of Rs.2,000
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...