×

ஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,476-க்கும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.52.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தொடும் ஆபத்து உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் கொரோனா பயங்கரமாக பரவி வருவதால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக தங்கம் விலை கொரோனாவை விட அதிக வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 31,616-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,952-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் முக்கியமான கடைகள் திறக்கப்படாத நிலையில் தங்கம் விலை உலக சந்தையில் தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

Tags : Gold, Price, Sales
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு