×

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் தென்னை, மாமரத்தை ஒடித்து காட்டுயானைகள அட்டகாசம்

ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் காட்டு யானைகள், தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் அடுத்துள்ள விவசாய நிலங்களில் சுமார் 40 ஏக்கரில் மா, தென்னை, வாழை போன்ற போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில், மாமரங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. மேலும் தென்னை மரங்களை வேரோடு சாய்த்து, தென்னங்குருத்தை சாப்பிட்டு சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து மாம்பழ குத்தகைக்கு எடுத்துள்ள குட்டி என்பவர் கூறுகையில்,

‘‘ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் குறிப்பாக ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் மட்டும், சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாமரங்கள் மற்றும் தென்னை, வாழை போன்ற விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாங்காய் சீசன் என்பதால் மாமரங்களை குறிவைத்து காட்டுயானை கூட்டங்கள் தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் முகாமிட்டு மாமரங்களை ஒடித்து மாங்காய்களை உண்டுள்ளன. தென்னை மரங்களை சாய்த்தும் சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பலமுறை வனத்துறைக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் மின் வேலி அமைத்து விவசாயிகளையும், பயிர்களையும் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Western Ghats ,Rajapalayam , Wildlife, Western Ghats
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...