2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு

சென்னை: கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ந நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கிய மார்ச் 24-ம் தேதி நிறைவு  பெற்றது.கடந்த 24-ம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், கடைசி தேர்வாக வேதியியல், கணக்கு பதிவியியல் தேர்வுகளை சுமார் 34,000 மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை. இதற்காக தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும்  தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள்  திருத்தும் பணி மே 27ம் தேதி நேற்று நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்தது. அதன்படி, சென்னை தவிர பிற மாவட்டங்களில் +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 202 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 9 வரை  நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். எல்லா வருடமும் மே மாதத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும். தற்போது, மே மாதத்தில் தான் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதால்,  ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு  இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் அறிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதினாலே ஏதாவது, போனஸ் மதிப்பெண் கிடைக்குமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில், 3 மதிப்பெண்  அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் சந்தேசத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர்கள் தேர்வு பெற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: