×

ஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி : தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவு

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 133-ஆக உள்ளது.அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95-ஆக உள்ளது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே துறையில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. திருவொற்றியூரைச் சேர்ந்த உதவி லோகோ பைலட் ஆக பணி புரிந்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவரைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் (பிசிஓஎம்) அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் ADRM /II/MAS என்ற பதவியில் பணி புரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மூடுமாறு Divisional Railway Manager உத்தரவிட்டுள்ளார்.


Tags : Corona ,headquarters ,offices ,Southern Railway ,control office , Staff, Corona, Echo, Southern Railway, Control, Office, Offices, Order to close
× RELATED அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும்...