×

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் : சீன தூதர் விளக்கம்

பெய்ஜிங் : இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏதும் இல்லை என்று சீன தூதர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியா - சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.ஆனால் இது குறித்த நிலைப்பாட்டை இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் மறுப்பு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சனை தலைவிரித்து ஆடி வரும் நிலையில், கொரோனாவை எதிர்த்து போராடுவது தான் இரு நாடுகளுக்கும் இலக்காக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இரு தரப்பு பேதங்களை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். இந்தியா - சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம். இந்தியா - சீனா இடையிலான உறவினை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கிடையே  எந்த அச்சுறுத்தலும் இல்லை. கருத்து வேறுபாடுகள் நம் உறவுகளை மறைக்கின்றன. நாம் ஒருபோதும் அதனை விட்டு விடக்கூடாது, என்றார். இந்தியா - சீனா பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து இருந்த நிலையில், இந்தியாவுக்கான சீன தூதர் அதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில், இந்தியாவுடன் எல்லை நிலையாகவும் கட்டுக்குள் உள்ளதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இப்பிரச்னையில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் தீர்வு காணும் வழிமுறைகளும் இரு நாடுகள் இடையே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : border dispute ,negotiation ,India ,China ,diplomat , India, China, Border, Problem, Negotiations, Chinese Ambassador, Explanation, Sun Weidang
× RELATED இந்தியா-சீன எல்லை பிரச்சனை...மத்திய...