2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஜூன் 15 முதல் தொடக்கம்...தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு முறையை நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. மருத்துவ  படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.  நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெரும்  பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் பயற்சி வகுப்புகள் மாநிலம்  முழுவதும் 412 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன.

Advertising
Advertising

வார இறுதி நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மட்டும் நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மொத்தம் 27 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில்,  நீட் பயிற்சி வகுப்புகளை கடந்த ஜனவரி மாதம் அரசு நிறுத்தி வைத்தது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கி இருப்பதாலும், விரைவில் பொது தேர்வுகள் வர இருப்பதால் நீட் தேர்வுக்கான  பயற்சி வகுப்புகள் நிறுத்திவைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்தது.

இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தும் நீட் தேர்விற்கான வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால், 2019-2020 ஆண்டுக்கான  அரசு, அரசு  உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மூலம் விவரங்களை தெரிவிக்குமாறு  முதன்மை கல்வி அலுவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் நீட் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் நீட் தேர்வுக்க இணையவழியில் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இலவச நீட் பயற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களில்  கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை. 2018 - 2019ம் ஆண்டில் 5 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

Related Stories: