×

கொரோனாவால் தன் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே 3 மாதங்கள் தவித்தபடியே காத்திருந்த நாய்!

பெய்ஜிங்: கொரோனாவால் தனது எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் நாய் ஒன்று மருத்துவமனை வாசலிலேயே 3 மாதங்கள் அவருக்காக தவித்தபடியே காத்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சீனாவின் வூகான் நகரை சேர்ந்த நபர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் அவரை விட்டு எங்கேயுமே போகாது. 7 வருடங்கள் எஜமானருக்கும், நாய்க்கும் ஒரு நெருக்கம் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில்தான் சீனாவில் கொரோனா கொடூரமாக தாண்டவமாடியது. அதில் எஜமானருக்கும் தொற்று வந்துவிட்டது. இதனால் தான் வளர்ந்து வந்த 7 வயது கலப்பின நாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் அதன் எஜமானர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் 7 நாட்களுக்கு முன்னர் எஜமானர் பரிதாபமாக பலியானார்.

இந்நிலையில் தமது எஜமானர் திரும்ப வந்து தம்மையும் அழைத்துக் கொண்டு குடியிருப்புக்கு செல்வார் என அந்த நாய் அங்கேயே காத்திருந்துள்ளது.மருத்துவமனை ஊழியர்கள் துரத்தியும் அந்த நாய் அங்கிருந்து வெளியேற மறுத்து வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக அதன் எஜமானர் விட்டுச் சென்ற பகுதியிலேயே அந்த நாய் காத்திருந்துள்ளது. இந்த 3 மாத காலமும் மருத்துவமனை ஊழியர்களே அதற்கு உணவும் அளித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 20ம் தேதி, மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த நாயை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் எஜமானருக்காக 3 மாசமாக அந்த நாய் உட்கார்ந்திருந்த இடத்தை இப்போதுகூட நினைவுகூர்ந்தபடியே மருத்துவமனை ஊழியர்கள் கடந்து செல்கிறார்கள்.


Tags : master ,Corona , Corona, Masters, Died, Unknown, Hospital, Months, Skip, Dog
× RELATED மாஸ்டர் படத்தில் விஜய்க்கு நான் கொடூர வில்லன்......! விஜய் சேதுபதி