பாதிப்பில் 3-வது இடத்திற்கு முன்னேறியது டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்வு; 4531 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,58,333 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,566 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 194 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 4531 பேர் உயிரிழந்த நிலையில், 67,692 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 56,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,897 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 17,918 பேர்   குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது  இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 18,545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.    இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9909 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 15,257 பேருக்கு  தொற்று    உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 303 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7264 பேர் குணமடைந்துள்ளனர்.  

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 781 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 87 பேர் குணமடைந்தது.

பீகாரில் 3061 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 1083 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 279 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 187 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 369 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 83 பேர் குணமடைந்தது.

கோவாவில் 68 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 15,195 பேருக்கு பாதிப்பு; 938 பேர் பலி; 7549 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 1381 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 838 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 230 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 165 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1004 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 552 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 7703 பேருக்கு பாதிப்பு; 173 பேர் பலி; 4457 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 448 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 185 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 53 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 44 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 20 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 1593 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 733 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 46 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 2139 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 1918 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 469 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 79 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 2418 பேருக்கு பாதிப்பு; 47 பேர் பலி; 781 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 1921 பேருக்கு பாதிப்பு; 26 பேர் பலி; 854 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 2098 பேருக்கு பாதிப்பு; 63 பேர் பலி; 1284 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 4192 பேருக்கு பாதிப்பு; 289 பேர் பலி; 1578 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 6991 பேருக்கு பாதிப்பு; 182 பேர் பலி; 3991 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 3171 பேருக்கு பாதிப்பு; 57 பேர் பலி; 2009 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 7261 பேருக்கு பாதிப்பு; 313 பேர் பலி; 3927 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 273 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 70 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Related Stories: