கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பயனடையாத பொதுமக்கள்: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை...!

சென்னை: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. அதனால், கச்சா  எண்ணெய்யின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதற்கிடையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி கடந்த மே 3-ம் தேதி உயர்த்தப்பட்டது.  பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.

Advertising
Advertising

இதனையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்ந்தது. எனினும், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 25 நாட்களாக மாற்றமின்றி, ஒரே விலையில் தொடர்கிறது. இதன்படி, பெட்ரோல்  75.54 ரூபாயாகவும், டீசல் 68.22 ரூபாயாகவும் உள்ளது. இதே விலையில் கடந்த 25 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், வாகன ஓட்டிகள் குழப்பத்தில் உள்ளனர். இருந்ததாலும், கச்சா எண்ணென் விலை  வீழ்ச்சியடைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: