×

தேசிய பேரிடர் குழுவின் 12 மணி நேர போராட்டம் தோல்வி; தெலுங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலாக மீட்பு...!

திருமலை: தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி  மாவட்டத்தில்  பாதான்சேருவை சேர்ந்தவர் மங்கலி கோவர்தன். இவரது மனைவி நவீனா. இவர்களது 3வது மகன் சாய் வர்தன். கோவர்தன் குடும்பத்தினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  மேதக் மாவட்டம், போட்சனாபல்லி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில், கோவர்தனின் மாமா பிட்சாதிபதிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர்  விவசாய நிலங்களை பார்ப்பதற்காக நேற்று கோவர்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றனர். இதற்கிடையே, பிட்சாதிபதி விவசாயத்திற்காக தனது நிலத்தில்  ஏற்கனவே இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு போட்டு தண்ணீர் வராததால் மீண்டும் நேற்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

தொடர்ந்து 120 அடி வரை ஆழ்துளை போட்டும் தண்ணீர் வராததால் அதனை அப்படியே விட்டு விட்டு அவரவர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு  விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் சாய்வரதன் பெற்றோர் கண் எதிரிலேயே புதிதாக போட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தொடர்ந்து, சிறுவனை  மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது. இருப்பினும், 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தேசியப் பேரிடர்  மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டனர். சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த தீபாவளி அன்று சிறுவன் சுர்ஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவிலும் இந்த கொடுமை  அரங்கேறியுள்ளது. இதனால், ஆழ்துளை கிணறு விவகாரத்தில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

Tags : National Disaster Committee ,Telangana National Disaster Committee ,Telangana , National Disaster Committee attempt failed; Dead body of a 3-year-old boy found dead in Telangana
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து