கொரோனா கோரத்தாண்டவம்,..3.56 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 57.84 லட்சத்தை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 356,937 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 5,784,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,494,952 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 52,973 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151,767 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 64,426 பேர் குணமடைந்தனர்.  

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 102,107 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,745,803 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,072 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231,139 ஆக உயர்ந்துள்ளது.

* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,697 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414,661 ஆக அதிகரித்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,118 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 283,849 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,968 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370,680 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,596 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182,913 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 37,460 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 267,240 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,564 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141,591 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,592 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,533 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 181,895 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,871 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,768 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,993 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 4,431 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,917 பேரும், சுவீடன் நாட்டில் 4,220 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,765 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,631 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,134 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,356 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,473 ஆக அதிகரித்துள்ளது. போலந்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,028 ஆக அதிகரித்துள்ளது. ருமேனியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,227 ஆக உயர்ந்துள்ளது.

ஈக்வடார் நாட்டில் கொரோனாவுக்கு 3,275 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் 1,225 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் இதுவரை 3,983 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

Related Stories: