வீடுபுகுந்து திருடிய ஆசாமி கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து பல்வேறு புகார்கள் போலீசாருக்கு வந்தன. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் போலீசார் கொள்ளை நடந்த இடங்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக  வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரை சேர்ந்த சூர்யா (என்ற) கொசுறு சூர்யா (20), என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 6 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். சூர்யாவை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: