×

சென்னையில் கொரோனாவால் 4 பேர் உயிரிழப்பு : இறப்பு சதவீதம் அதிகரிப்பு ,.. வயது வித்தியாசம் இல்லை,.. பீதியில் மக்கள்

சென்னை: சென்னையில் கொரோனாவால் நேற்றும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தனர்.  தொடர்ந்து சிகிச்சை பெறுவர்களின் இறக்கும் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ெகாரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சென்னையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த வாரம்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மதுரவாயல் பகுதியை சேர்ந்த 41 வயது நபரும், அதைப்போன்று சூளைமேடு பகுதியை சேர்ந்த 56 வயது நபரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதைப்போன்று ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செங்குன்றம், நாரவாரிகுப்பம், வேணுகோபால் சாமி தெருவை சேர்ந்த 55 வயது ஆண் கடந்த 23ம் தேதி சளி, இருமல் இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கடந்த 25ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அதைப்போன்று  கொடுங்கையூர், முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்த 74 வயது ஆண் கடந்த 23ம் தேதி சளி, இருமல் இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டத்தில் அவருக்கும் கடந்த 25ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் பெரும்புதூர் தாலுகா, ஓ.எம்.மங்களம் கிராம நிர்வாக அலுவலரான இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் அதிகரித்து வருவதால் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள்  மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலுக்குள்ளாகி தற்ெகாலை
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஏதாவது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் நோயாளிகளுடன் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று யாராவது 24 மணி நேரமும் அருகில் இருப்பார்கள். அதனால் அவர்கள் தனக்கு இப்படி நோய் வந்துவிட்டதா என்று மனஉளைச்சல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வார்கள்.

அதனால் நோய் வந்ததை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுடன் தொற்று மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்று கூறி உறவினர்கள், நண்பர்கள் என்று யாரையும் அனுமதிக்காததாலும், குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டும், நோய் சரியாகி வெளியில் சென்றால் நம்மிடம் முன்பு போல் யாரும் பேசமாட்டார்கள் என்று மனஉளைச்சலுக்கு ஆளாகும் நபர்கள் தற்கொலை செய்து முடிவுக்கு வருகின்றனர்.



Tags : deaths ,Chennai , Madras, Corona, 4 deaths and deaths increase
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...