காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் டிஜிபி உத்தரவு

நாகர்கோவில்: காசி மீதான வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது  சமூக வலைதளங்கள் மூலம் பழகி, இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில்  நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (31) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற குமரி மாவட்ட காவல்துறை பரிந்துரை செய்தது.  ஆவணங்களும் சிபிசிஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, காசி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: