×

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்: போராட்டக்காரர்கள் மீது போலீசார் மிளகு குண்டு வீச்சு

ஹாங்காங்: சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் மிளகு குண்டுகளை வீசினர். இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், கடந்த 1997ல் விடுதலை பெற்றது. இதைத் தொடர்ந்து, சீனாவின் கட்டுப்பாட்டில் வந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த நகரில் `ஒரே நாடு இரண்டு முறை’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு குடை புரட்சி என்ற பெயரில் சீனாவை எதிர்த்து இந்த நகர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நகரத்து தலைவரை நேரடியாக தேர்வு செய்யும் முன் சீனாவின் ஆய்வுக்கு பின்னரே இதற்கான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என சீனா அறிவித்ததை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. பின்னர், இந்த நேரடி தேர்வு திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஹாங்காங்கில் போராட்டம் வெடித்துள்ளது. ஹாங்காக்கான தேசிய பாதுகாப்பு சட்டம் சீன நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், சீன தேசிய கீதம் தொடர்பாக எம்பி.க்கள் நேற்று விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சீன தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க. இந் சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் தங்களின் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் என கருதி ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள், ஜனநாயகத்துக்கு ஆதரவாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் அவர்கள் கலைய மறுத்ததால் அவர்கள் மீது மிளகு புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். தொடர்ந்து, 16 பேரை கைது செய்த போலீசார். அவர்களிடம் இருந்து குண்டுகள், ஸ்குரு டிரைவர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Protests ,Hong Kong ,protesters ,bombing ,China ,Pepper ,Chinese , China, National Security Act, Hong Kong, Demonstration, Protesters, Police, Pepper Bomb
× RELATED ஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்துவதாக டிக் - டாக் நிறுவனம் அறிவிப்பு