×

திருப்பதி மலைப்பாதையில் அரியவகை தேவாங்குகள் பிடிபட்டது

திருமலை: ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மலைப்பாதையில் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித வாகனங்களும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் மலைப்பாதையில் நடமாடி வருகிறது. ஏற்கனவே சிறுத்தை, மலைப்பாம்பு, முள்ளம்பன்றி, கரடி, மான், கடமான் போன்றவை சாலைகளில் சுற்றிவரக்கூடிய நிலையில் நேற்று அரிய வகையான 2 தேவாங்கு குட்டிகள், 2வது மலைப்பாதை பாஷ்யகார்ல சன்னதி அருகே சுற்றி வந்தது.

இதனை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர். இந்த இரண்டு தேவாங்கு குட்டிகள் மீண்டும் சாலையை நோக்கி வந்தால் அதனை பிடித்து திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா உயிரியியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : mountain pass ,Tirupati , Tirupati mountain pass, rare species
× RELATED ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை...