×

இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை; சமரசம் செய்ய தயார்..! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கு உதவ அமெரிக்கா தயார் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா சமரசம் செய்ய தயாராக இருப்பது குறித்து இந்தியா, சீனாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் எல்லை பிரச்சனையை தீர்க்க விரும்புவதாகவும் அமெரிக்காவால் தீர்க்க முடியும் என்றும் அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் ”சீனா வைரஸ்” என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைக்க தயார் என்று தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லடாக் எல்லைப்பகுதியில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருநாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சமரசம் செய்து வைக்கத் அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும், இந்திய கட்டுப்பாட்டுக்குள்ள 4 கிலோ மீட்டர் வரை உள்ளே வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தற்காலிக கூடாரங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கும் குழிகள் போன்றவை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை சீன ராணுவம் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்தியா, சீன ராணுவத்தை விட அதிக வீரர்களை குவித்துள்ளது.

Tags : President ,China ,India ,Trump Announces ,US , India, China, border dispute, compromise, US President, Trump
× RELATED சீனா பாணியில் ரஷ்யாவிலும் கதை...