பீகாரில் 200; உத்தரப் பிரதேசத்தில் 50 : கொத்து கொத்தாக செத்து மடியும் வௌவால்கள்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பெல்காட் பகுதியில் ஏராளமான வௌவால்கள் செத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவ வௌவால்கள் பின்னணியில் இருந்ததாக சொல்லப்படுகின்றன. எனவே சமீப காலமாக வௌவால்களை கண்டாலே தப்பியோடும் நிகழ்வுகளை காண முடிகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே பெல்காட் பகுதியில் 50- க்கும் மேற்பட்ட வௌவால்கள் செத்து விழுந்துள்ளன. இதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது ஆபத்தின் அறிகுறியா இருக்குமா என்று முதியவர்கள் அச்சப்படுகின்றனர். இதுபற்றி வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் ஐ.வி.ஆர்.ஐ எனப்படும் ஆராய்ச்சி மையத்திற்கு வௌவால்களின் உடல்கள் அனுப்பி வைத்துள்ளனர்.இதே போல் பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்பூர் மாவட்டத்தின் அரா நகரின் தராரி என்ற கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வௌவால்கள் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த பீகார் அரசாங்கத்தின் கால்நடை வளர்ப்பின் மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இறந்த

வௌவால்களின் உடல்களை பாட்னாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

அதிகப்படியான வெப்பத்தின் காரணமாகவும் வௌவால்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது.  எனவே மரங்களில் போதிய தண்ணீர் விடுமாறும் கிராம மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: