×

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நெல்லையில் கூரையுடன் உலா வரும் இருசக்கர வாகனம்

நெல்லை:  கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள நெல்லை கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது  இருசக்கர வாகனத்திற்கு மேற்கூரை அமைத்து வலம் வருகிறார். நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடைகால அக்னி நட்சத்திர தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் பொழுதில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வியர்வை சிந்தி விரைவில் சோர்வடைகின்றனர். வயதானவர்கள் சொந்த பணிகளுக்காக பகல் நேரங்களில் வெளியில் வர முடியாத நிலை நீடிக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எப்போது வீடு திரும்புவோம் என்ற எண்ணத்தில் தவிக்கின்றனர் இந்த நிலையில் நெல்லை அடுத்துள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் (50) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள மேற்கூரை அமைக்க முடிவு செய்தார்.  

மனதில் உதித்த யோசனையை இரும்புப் பட்டறை பணியாளரிடம் தெரிவிக்க அவர் அழகான மேற்கூரை தயாரித்துக் கொடுத்துள்ளார். ஆட்டோவிற்கு போடப்படும் மேற்கூரை தார்ப்பாய் மேலே அமைத்துள்ளார். கூரையுடன் கூடிய இந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது. காற்று உட்புகுந்து செல்ல வசதியாக உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிதமான வேகத்தில் பயமின்றி ஓட்டிச் செல்கிறார். நெல்லை சாலையில் பயணிக்கும் இந்த மேற்கூரை இருசக்கர வாகனத்தை பலரும் ஆர்வமாக பார்க்கின்றனர்.

Tags : Two wheeler , roof to escape,scorching sun
× RELATED சட்டம் – ஒழுங்கு பிரச்னையால்...