மாணவர்களின் பீலிங்கை புரிந்த அரசு: ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக் கூடாது...தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை...!

சென்னை: கொரோனா பரவலால் தமிழகமெங்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு மார்ச் 2வது வாரம் முதல் விடுமுறை விடப்பட்டது. ஊரடங்கு நாட்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ என அரசு அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி ஜூலை அல்லது ஆகஸ்டில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் அரசுகள் தவிக்கின்றன.

ஆல் பாஸ் அறிவிப்பை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் ‘ஆன்லைன் கிளாஸ்’ நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிகள் ஜூம் ஆப் மூலம் நேரடி ஆன்லைன் வகுப்புகள் நடத்துகின்றன. இதில் சிக்கல்கள் நிறைய இருப்பதால் வாட்ஸ் அப் உதவியுடன் பாடம் நடத்தும் முறைக்கு பல பள்ளிகள் மாறியுள்ளன. பள்ளி வகுப்பறையில் உள்ளது போலவே, ஒவ்வொரு பீரியட் ஆக பிரித்து வாட்ஸ் அப்பில் ஆடியோக்கள், வீடியோக்களை ஒவ்வொரு பாடத்திற்குரிய ஆசிரியர்கள் அனுப்புகின்றனர். அதை மாணவர்கள், ஹெட்போனில் கேட்டு செய்து, அதை போட்டோ எடுத்து அனுப்புகின்றனர். அதை டவுன்லோடு செய்து ஆசிரியர்கள் ஓகே செய்கின்றனர். இப்படியே வீட்டுப்பாடம், அசைன்மென்ட் என கிளாஸ்களை கட்டுகிறது. ஸ்நாக்ஸ் மற்றும் லஞ்ச் இடைவேளை எல்லாம் விடப்படுகிறது.

இந்நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக் கூடாது. அரசின் உத்தரவை மீறி ஆன்லைனில் பாடம் எடுத்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: