×

ஜூன் இறுதியில் ரிசல்டா?; சென்னை தவிர பிற மாவட்டங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 202 மையங்களில் தொடங்கியது...!

சென்னை: தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மே 27ம் தேதி (இன்று) நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்தது.

அதன்படி, சென்னை தவிர பிற மாவட்டங்களில் +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 202 மையங்களில் தொடங்கியுள்ளது. ஜூன் 9 வரை நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணியில் முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை துணை தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். அதற்கு பிறகே ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த தொடங்குவார்கள். எல்லா வருடமும் மே மாதத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும். தற்போது, மே மாதத்தில் தான் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதால், ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து வசதி ஏற்பாடு

விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே செய்துள்ளனர். ஒவ்வொரு முகாம் வாரியாக முக்கிய வழித்தடங்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழித்தடத்துக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் நிலையில் போக்குவரத்து பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : centers ,Chennai ,districts , Risalda at the end of June ?; Plus 2 answer sheet work has started in 202 centers in districts other than Chennai ...!
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!