×

பாதிப்பில் குஜராத் மற்றும் டெல்லி 3-ம் இடம்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்வு; 4337 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்    இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரித்துள்ளது. கடந்த    24 மணிநேரத்தில் மட்டும் 6,387 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 170 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால்   இதுவரை 4337 பேர் உயிரிழந்த நிலையில், 64,426 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,792 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,954 பேர்   குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 17,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.    இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9342 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 14,465 பேருக்கு தொற்று    உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 915 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7139 பேர் குணமடைந்துள்ளனர்.  

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 616 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 62 பேர் குணமடைந்தது.
பீகாரில் 2983 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 900 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 266 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 187 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 361 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 79 பேர் குணமடைந்தது.

கோவாவில் 67 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 28 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 14,465 பேருக்கு பாதிப்பு; 915 பேர் பலி; 7223 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 1305 பேருக்கு பாதிப்பு; 17 பேர் பலி; 824 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 207 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 165 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 963 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 542 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 7536 பேருக்கு பாதிப்பு; 170 பேர் பலி; 4171 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 426 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 175 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 53 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 39 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 15 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 1517 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 733 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 46 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2106 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 1918 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 401 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 64 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 2283 பேருக்கு பாதிப்பு; 44 பேர் பலி; 748 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 1759 பேருக்கு பாதிப்பு; 24 பேர் பலி; 833 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1991 பேருக்கு பாதிப்பு; 57 பேர் பலி; 1284 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 4009 பேருக்கு பாதிப்பு; 283 பேர் பலி; 1486 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 6548 பேருக்கு பாதிப்பு; 170 பேர் பலி; 3698 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 3171 பேருக்கு பாதிப்பு; 57 பேர் பலி; 2009 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 7024 பேருக்கு பாதிப்பு; 305 பேர் பலி; 3689 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 247 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 67 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Tags : Gujarat ,Delhi 3 ,India , Gujarat and Delhi 3 in Half: Coronavirus in India rises to 1.51 lakh 4337 people killed
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...