தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் தரவேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: வெளிமாநில தொழிலாளர்கள் படும் துன்பத்துக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள்தான் என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் செய்து தர உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் நாளைக்குள் இது தொடர்பாக பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ல் இருந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. வரும் 31ம் தேதியுடன் 4ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், அடுத்ததாக மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்படி தொடர்ந்து ஊரடங்க நீட்டிக்கப்பட்டு வந்ததால், பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்ததுடன், உணவும் கிடைக்காமல் பெரும் அவதி அடைந்தனர்.

இதனால் பிள்ளைகள் படும் கஷ்டத்ைத பார்க்க பொறுக்க முடியாமல், அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ூர்களுக்கு நடந்தே செல்ல ஆரம்பித்தனர். உரிய போக்குவரத்து வசதி இல்லாமல், இப்படி லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற நிலையில், பல்வேறு விபத்துக்களில் சிக்கி அவர்கள் பலியாக ஆரம்பித்தனர். மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 16 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேசத்தில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுபோல் நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் நிறைய சம்பவங்கள் நடந்தன.  

தற்போது புலம் பெயர்ந்த தொழலாளர்களுக்காக மே 1ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் இதுவரை 40 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் சொந்த மாநிலம் சென்றுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவிக்கிறது. ஆனால், இன்னமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான செய்திகளின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று வழக்காகப் பதிவு செய்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷண் கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், ‘‘பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களை இலவசமாக மத்திய அரசும், மாநில அரசுளும் வழங்க வேண்டும். அவர்களுக்கு .ரிய வசதிகளை செய்து தராததால்தான் அவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். மத்திய அரசும், மாநில அரசுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் மற்றும் பிரச்னையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பது குறித்து நாளைக்கும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்துக்கு உதவுவார்’’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: