அமெரிக்காவில் மலிவு விலை வென்டிலேட்டர் கண்டுபிடித்த இந்திய தம்பதி: விலை 7,600 மட்டுமே

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா டெக் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் தேவேஷ் ரஞ்சன். இவரது மனைவி குமுதா. அட்லாண்டாவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி ஓபன்-ஏர்வென்ட்ஜிடி என்ற குறைந்த விலை வென்டிலேட்டர்களை 3 வாரத்திலேயே உருவாக்கியுள்ளனர். இது ஒரு அவசர கால வென்டிலேட்டர். இந்த வென்டிலேட்டர் ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தீவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த வென்டிலேட்டர் அல்ல. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நுரையீரல் இறுகி மூச்சுத் திணறல் ஏற்படும். அந்த நேரத்தில் இந்த தம்பதியினர் கண்டுபிடித்துள்ள வென்டிலேட்டர் அவர்களது நுரையீரலை சமநிலையில் வைத்திருக்க உதவுவதன் மூலம், அவர்களால் எளிதில் சுவாசிக்க முடியும்.

இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த மொபைல் வென்டிலேட்டர்களின் மாதிரியை இந்த தம்பதியினர் உருவாக்கி உள்ளனர். இது போன்ற வென்டிலேட்டர்கள் அமெரிக்காவில் 1000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.76,000. ஆனால் தேவேஷ் தம்பதியினரின் வென்டிலேட்டர் இதை விட 10 மடங்கு விலை குறைவானது. இது ஒன்றில் விலை ரூ.7,600 மட்டுமே. ஆய்வு கட்டத்தை கடந்து விரைவில் இது உற்பத்தி நிலையை எட்ட உள்ளது.

Related Stories: