தவிக்கும் தமிழர்களை அழைத்து வர துபாய் - சென்னை இடையே விமானம்

துபாய்: சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் வர விரும்பும் இந்தியர்களை அழைத்து வர‌ ‘வந்தே பாரத்’ திட்டம் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக ஏராளமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம்  அழைத்து வரப்பட்டனர். தமிழகத்திற்கு துபாயிலிருந்து 2 விமானங்கள் இயக்கப்பட்டது .இது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் ஆனால் இரண்டாவது கட்ட நடவடிக்கையில் அதிர்ச்சிகரமாக தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களில், ஊர் திரும்ப‌ ஆயிரக்கணக்கானோர் இந்திய‌ அரசு வலைதளைங்களில் பதிவு செய்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளும் கணடனம் தெரிவித்தன.

இவர்களின் கோரிக்கை குறித்து தினகரன் நாளிதழ் செய்தி விரிவாக வந்தது.  இதனையடுத்து தற்போது 3வது கட்ட ‘வந்தே பாரத்’ மிஷன் திட்டத்தில் தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 4 சிறப்பு விமானங்கள் துபாயிலிருந்து இயக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை என 4 விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது இதற்காக துபாய் ஈமான் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இச்செய்தியை  முதலாவதாக வெளியிட்டு மத்திய, மாநில அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல உதவிய‌ தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: