அமெரிக்க இந்தியருக்கு கண்டுபிடிப்பாளர் விருது

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது, இந்திய அமெரிக்கரான ராஜீவ் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அமெரிக்கர் ராஜீவ் ஜோஷி. இவர் மும்பை ஐஐடி.யில் படித்தவர். நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 250க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்களை கண்டறிந்துள்ளார். இவை அனைத்தும் காப்புரிமை பெற்றவை. இந்நிலையில், ராஜேஷ் ஜோஷிக்கு நியூயார்க்கில் உள்ள அறிவுசார் சொத்து சட்ட சங்கம் சார்பில் புதிய கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மற்றும் செயல்முறைகளை கண்டுபிடித்துள்ளார். இவை சூப்பர் கம்யூட்டர், லேப்டாப்க்கள், ஸ்மார்ட்போன் மற்றும் பல மின்னணு பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

Related Stories: