இந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை:  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு கொரோனாவால், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் வாடகை வீட்டு உரிமையாளர்கள் குடியிருப்போரிடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக்கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இது வாடகைக்கு குடியிருக்கும் பெரும்பாலான ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களுக்கு பயனளிக்கிறது.

Advertising
Advertising

அதே போல இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களின் சொத்துக்களில் வாடகைக்கு குடியிருப்போர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்து செலுத்தலாம் என்ற அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: