×

ஸ்டான்லி அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் திருவிக நகர் மண்டலம் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அதன்படி, தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதி சந்தியப்பன் 2வது தெருவில் நிறைமாத கர்ப்பிணி, எஸ்.எஸ்.புரம் பகுதியில் ஒருவர், ெகான்னூர் நெடுஞ்சாலை பகுதியில் 59 வயது நபர், ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலையில் ரயில்வே ஊழியர்,  பாஷ்யம் 2வது தெருவில் கல்லூரி மாணவன், பெரவள்ளூர் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த ரயில்வே ஊழியரான 59 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது.

இதேபோல், செம்பியம் சின்னசாமி தெரு, வாஞ்சிநாதன் தெரு, பாரதி தெரு ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், செம்பியம் காவலர் குடியிருப்பு பகுதியில் 50 வயது சிறப்பு உதவி ஆய்வாளர், திருவிக நகர் வீர ராகவன் தெரு, சக்தி விநாயகர் கோயில் தெரு, சுப்புராயன் தோட்டம், மதுரை சாமி மடம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  lமேற்கு தாம்பரம் பிருந்தாவன் அவென்யூவை சேர்ந்த 36 வயது பெண், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். அவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நோய் தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதேபோல், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை உதவி மேலாளரான கடப்பேரி, எம்இஎஸ் குறுக்கு தெருவை சேர்ந்த நபருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தி.நகர் துணை கமிஷனர் பணிக்கு திரும்பினார்: தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமாருக்கு கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர், நேற்று பணிக்கு திரும்பினார். அவரை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வரவேற்று வாழ்த்தினார். தொடர்ந்து, மாம்பலம் காவல் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர்களுக்கான ஓய்வு அறையை கமிஷனர் திறந்து வைத்தார். இதில், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் மகேஸ்வரி, அடையாறு துணை கமிஷனர் பகலவன் மற்றும் நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,Stanley Government Hospital Nurse , Stanley Government Hospital, Corona
× RELATED அதிமுக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா உறுதி