×

1000 உதவித்தொகை பெறுவதற்கு நடைபாதை வியாபாரிகள் ஆவணம் சமர்ப்பிக்கலாம்

சென்னை: சென்னையில்  மொத்தம் 1.26 லட்சம் நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். உரடங்கை முன்னிட்டு இவர்கள் அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.  இதற்காக நடைபாதை வியாபாரிகள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தற்போது வரை 14,000 வியாபாரிகள் இந்த தொகையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் இதுவரை 10,000 நடைபாதை வியாபாரிகள் மட்டுமே வங்கி  கணக்கு விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

 உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மண்டலங்களிலும் அளிக்கலாம். வியாபாரிகளிடம் நேரடியாகவும் விண்ணப்பம் பெறப்பட்டது. இதன்படி தற்போது வரை 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை ஆவணங்களை சமர்ப்பிக்காத நடைபாதை வியாபாரிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அரசின் உதவித்தொகை வழங்கப்படும்’’என்றனர்.Tags : Pavement traders , 1000 Scholarships, Merchants, Document
× RELATED சட்டக்கல்லூரியில் இருந்து வெளிவரும்...