×

மாஞ்சா நூல் கழுத்தறுத்து 4 வயது சிறுமி படுகாயம்: தந்தையுடன் பைக்கில் சென்றபோது சோகம்

சென்னை: வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 7வது தெருவை சேர்ந்த பஷீர் அகமது நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு, தனது 4 வயது மகள் ஆயிஷா கனியுடன் பைக்கில் உறவினர் வீட்டிற்கு புறப்பட்டார். எம்கேபி நகர் வடக்கு அவென்யூ சாலையில் சென்றபோது, அங்கு பறந்து கொண்டிருந்த காற்றாடியின் மாஞ்சா நூல் சிறுமியின் கழுத்தில் சிக்கியது. இதை பார்த்த பஷீர் அகமது உடனே பைக்கை நிறுத்தினார். அதற்குள் சிறுமியின் கழுத்து அறுபட்டு ரத்தம் வழிந்தோடியது. அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் மகளை அனுமதித்தார். அங்கு சிறுமி கழுத்தில் 4 தையல்கள் போடப்பட்டது. இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Manja yarn, 4 year old girl, pussy, father
× RELATED சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி...