கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறப்பு மாநகர பட்டியலில் சென்னை, பெங்களூரு

பெங்களூரு: நாடு  முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவாமல்  தடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய சுகாதார துறை அமைச்சகத்துடன் இணைந்து,  அந்தந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் போர்க்கால அடிப்படையில்  செயல்பட்டு வருகிறது. நோய் பரவல் தடுக்க ஒவ்வொரு மாநகராட்சியும் தனி தனி  வழிமுறைகள் பின்பற்றி வருகிறார்கள்.

இதில் வெற்றியும் தோல்வியும்  சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா  தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சிகள் எப்படி செயல்படுகிறது என்ற  ஆய்வை மத்திய சுகாதார அமைச்சகம் மேற்கொண்டது. இதில் சென்னை, ஜெய்ப்பூர்,  இந்தூர் ஆகிய 3  மாநகராட்சிகளுடன் பெங்களூரு மாநகராட்சியும் சிறப்பாக  செயல்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதை மக்கள் நல்வாழ்வு துறை  அமைச்சர் பி.ராமுலு உறுதி செய்தார்.

Related Stories: