×

பழநி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை

பழநி: பழநி பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலையில் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இங்கு விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகள் மற்றும் அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதாலும், கிணற்று பாசனத்தை நம்பியும் பழநி பகுதியில் ஆங்காங்கே மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்காச்சோளத்தில் வழக்கம்போல் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து கோம்பைபட்டியைச் சேர்ந்த துரைச்சாமி கூறுகையில், ‘கிணற்று பாசனத்தை நம்பி மக்காச்சோளம் பயிரிட்டேன். ஆனால், தற்போது படைப்புழுக்கள் தாக்க துவங்கி உள்ளன. கொரோனா தடை காலத்தால் வருமானமின்றி தவித்து வந்தோம். உரக்கடைகளில் விதைகள் மற்றும் உரங்கள் கடனுக்கு வாங்கி விவசாயம் செய்தோம். ஆனால், படைப்புழுவால் செய்வதறியாது தவித்து வருகிறோம். அரசு வேளாண்துறை மூலம் 100% மானியத்தில் படைப்புழு தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் வாழ்வு தப்பிக்கும்’ என்றார்.


Tags : Maize attack ,Palani , Fungus, maize, plague attack
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்