இந்தியப் பெருங்கடலுக்கு கீழே டெக்டோனிக் பிளேட் இரண்டாக பிளந்து வருவதாக புதிய ஆய்வில் தகவல்

டெல்லி : இந்தியப் பெருங்கடலுக்கு கீழே டெக்டோனிக் பிளேட் இரண்டாக பிளந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த சில நாட்களாக டெல்லியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் லைவ் சயின்ஸ் ஆய்வும் வெளியாகி இருக்கிறது.இந்தியப் பெருங்கடலுக்கு கீழே இருக்கும் டெக்டோனிக் பிளேட் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா கேப்ரிகான் டெக்டோனிக் பிளேட் என்று அழைக்கப்பட்டும் பிளேட்தான் தற்போது இரண்டாக பிளந்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தப் பிளேட் நத்தை வேகத்தில் இரண்டாக பிளந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 0.06 இஞ்ச் அளவிற்கு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்படியே விரிசல் ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளில் இரண்டாக பிளந்து ஒரு மைல் தூரத்திற்கு இரண்டு பாகங்களாக பிரிந்து செல்லும்.இந்திய ஆஸ்திரேலியா கேப்ரிகான் பிளேட் தற்போது பல்வேறு வேகங்களில் நகர்ந்து வருகிறது. முன்பு ஒரு சிறிய பிளவாக இருந்தது, தற்போது பெரிய அளவில் பிளவுபட்டு, புதிய எல்லைகளை இந்த பிளேட்டுகளுக்கு உருவாக்கி வருகின்றன. இந்தப் பகுதியில் அடுத்த 20,000 ஆண்டுகளுக்கு நிலநடுக்கம் இருக்காது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: