வீடற்றவர்களுக்கு முகாமாக மாற்றப்பட்ட அமேசான் தலைமையக கட்டடம் : 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் வசதிகள்!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் சியேட்டல் நகரில் உள்ள அமேசான் தலைமையக கட்டடம் வீடற்றவர்களுக்கு முகாமாக மாற்றப்பட்டுள்ளது.சியேட்டல் நகரில் அமைந்துள்ள இந்த 8 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதியில் அமேசான் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மற்றொரு புறத்தில் வீடடற்றவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் மேரிஸ் பிளேஸ் இணைந்து திறந்துள்ள இந்த முகாமில் 50 குடும்பங்கள் முதல் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 200 பேர் சமூக விலகலை கடைப்பிடித்து தங்கி வருகின்றனர்.63,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில் டைனிங் ஹால், சமையல் அறைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 1000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: