×

ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் கோயில்கள் திறப்பு?... ஊரடங்கால் 60 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள கோவில்களை திறக்க ஏற்பாடு நடைபெறுவதாக தகவல்

சென்னை: ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் 60 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள கோவில்களை திறக்க ஏற்பாடு நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தலாம் என அறநிலையத்துறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் மூலம் கோவில்களில் வழிபாடுகளை நேரடியாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டுப்பாடுகளுடன் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய மாநில அரசுகள் படிப்படியாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி அமைப்பினரை சேர்ந்த பலர் வினோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது; பல்வேறு கட்டுப்பாடுகளை படிப்படியாக குறைத்து வரும் மத்திய மாநில அரசுகள் ராமேஸ்வரம் கோவில்கள் திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ஜுன் மாதம் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலை கோவில்கள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுயள்ளது. மேலும் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நாளை முதல் கர்நாடகா மாநிலத்தில் கோவில்களில் நடைபெற கூடிய வழிபாடுகளை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு காண்பிப்பதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்துள்ளது. இதற்காக ஒரு செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இது போன்ற ஒரு நடவடிக்கை தமிழகத்திலும்  மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஜுன் 1-ம் தேதி முதல் இந்து சமய அறநிலை கோவில்கள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Tags : Temples ,Tamil Nadu , Temples, Temples Opening, Curfew
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு