ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின் போது விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின் போது விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் கிழக்கே அனாடிர் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக அந்நாட்டின் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது. ஆனால், திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தில் மூன்று குழு உறுப்பினர்கள் மற்றும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் இருந்தனர்.

இந்நிலையில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. தொழில் நுட்ப கோளாறால் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்றும், பயிற்சி மேற்கொண்டபொழுது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Related Stories: