சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக விலை குறைந்துள்ளது.சென்னையில் இன்று (மே 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,523 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,544 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.