×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ. 36,184க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக விலை குறைந்துள்ளது.சென்னையில் இன்று (மே 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,523 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,544 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நேற்று 36,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 168 ரூபாய் குறைந்து 36,184 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.52.50 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.52.10 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 52,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery, Gold, Price, Shaving, Sale
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...