47 நாட்களில் ரூ.11,052 கோடி ரீபண்ட்: மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி: 47 நாட்களில் ஜிஎஸ்டி ரீபண்ட் 11,052 கோடி வழங்கப்பட்டுள்ளது என, மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து இந்த வாரியம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி இந்த மாதம் 24ம் தேதி வரை ஜிஎஸ்டி ரீபண்ட் தொடர்பாக 29,230 கோரிக்கைகள் வந்திருந்தன. இவற்றை பரிசீலித்து, மொத்தம் 11,052 கோடி ரீபண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 47 நாட்களில் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட ஒரு லட்சம் நிறுவனங்கள் பலன் அடையும். மேற்கண்ட தொகையையும் சேர்த்து இதுவரை மொத்தம் 18,000 கோடி ரீபண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் ரீபண்ட் வழங்குவது தொடர்பாக இந்த வாரியம் கள அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், நிறுவனங்களிடம் நேரடியாக தாள்கள் வடிவிலான ஆவணங்கள் பெறுவதை தவிர்த்து, இ-மெயில் மூலம் பெற வேண்டும் எனவும், தாமதம் இன்றி ரீபண்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

Related Stories: