குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி துப்புரவு  ஊழியர்கள் 5 பேர், கடந்த 7ம் தேதி, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் தேங்கிய குப்பைகளை எடுப்பதற்காக குப்பை வண்டியுடன்  ரேடியோ மலை பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு, குடி போதையில் இருந்த 4 வாலிபர்கள், நகராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு, அடித்து விரட்டினர். இதனை கண்டித்து நகராட்சி ஊழியர்கள், நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு மேட்டு தெருவை சேர்ந்த பிரபல ரவுடி அஸ்லாம் (24), சுண்ணாம்பு கார தெரு முகமது மொய்தீன் (22), தினேஷ்குமார் (21) மாதவன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேர், தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பிகண்ணன், கலெக்டர் ஜான்லூயிசுக்கு பறிந்துரை செய்தார். அதன்பேரில் 4 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: