×

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 548 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 548 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 87 பேருக்கும்,கேரளாவில் இருந்து வந்த 2 பெருகும் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 407 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai , Tamil Nadu, Corona, Madras
× RELATED கேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி