×

ஹரியானாவில் ஊரடங்கு விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய டெல்லி பாஜக தலைவர்: அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால் சர்ச்சை

சண்டிகர்: ஹரியானாவில் ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் தவிர்த்து பிற ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தளங்கள் மற்றும் கேளிக்கை பூங்கா உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு தொடர்பானவையும் தடை விதிக்கப்பட்டது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டதோடு, அனைத்து  தொழில்களையும் முடக்கி உள்ளது.

ஊரடங்கு காரணமாக உலக முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கிலான புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். தற்போது பல்வேறு தளர்வுகள் மூலம் சாலை போக்குவரத்து, உள்நாட்டு விமான சேவை மற்றும் ஏசி அல்லாத ரயில் பெட்டிகளை மத்திய அரசு இயக்கி வருகிறது.

இந்நிலையில் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ஷேக்புரா நகரில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. மற்றும் அக்கட்சியின் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடினார். ஊரடங்கு காலத்தில், சமூக இடைவெளி மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அவர் செயல்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BJP ,Manoj Tiwari ,Delhi ,government ,Haryana ,game ,CoronaLockdown ,district ,Sonipat ,Sheikhpura , Haryana, curfew, cricket, Delhi BJP leader, controversy
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்