உலகளவில் பாதிப்பு 55 லட்சத்தை நெருங்கியது: ஹைட்ராக்சி குளோரோகுயினால் இறப்பு விகிதமும், இதயப் பிரச்னையும் தான் அதிகரிப்பு: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்துவதால் இறப்பு விகிதம் மற்றும் இதயப் பிரச்னைகள் அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. இதனை அடுத்து தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மூலம் நோயை குணப்படுத்த முடியுமா எனவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மார்ச் மாதம் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு மற்றும் இதயப்பிரச்னைகள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 671 மருத்துவமனைகளில் ஏபரல் மாதத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 96,000 நோயாளிகளிடம் இந்த பரிசோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் 15,000 நோயாளிகளுக்கு ஆண்டிபாடியுடன் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை இணைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை மூலம் நோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது இறப்பை ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்.

மேலும், சிகிச்சை பெற்ற நோயாளிகளில் சிலருக்கு இருதய அரித்மியா அதிகரித்திருப்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதவாது சாதரண நோய் எதிர்ப்பு சக்திகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்றவர்கள் 8% பேருக்கு இதய அரித்மியா உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: