×

மாலை டிஸ்சார்ஜ்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்...எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை...!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் 12.30 மணியளவில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். முதல்வருடன் தமிழக அமைச்சர்களும் சென்று  துணை முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், எம்.ஜி.எம். மருத்துவமனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழு உடல் பரிசோதனை நடந்தது; இன்று மாலை வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : O. Panneerselvam ,MGM , Evening Discharge: Deputy Chief Minister O. Panneerselvam is in good health ... MGM Hospital Report ...!
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய்...