×

பெரம்பலூர் பகுதியில் மானாவாரி நிலத்தில் திராட்சை சாகுபடி: விவசாயி அசத்தல்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் மானாவாரி நிலத்தில் திராட்சை சாகுபடி செய்துள்ள விவசாயி திராட்சை பந்தலுக்கே வந்து பர்சேஸ் செய்வதால், ஏற்றுமதிக்கு வேலையில்லை என தெரிவித்தார். தமிழ்நாட்டில் திராட்சை விவசாயத்தில் முதலிடத்தில் உள்ளது தேனி மாவட்டம். திராட்சை விளையக்கூடிய வெப்பநிலை தேனியில் மட்டும்தான் உள்ளது. தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டாலும், தேனியில் மட்டும் 2,300 ஹெக்டேரில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது. திராட்சைப்பழம் மலச்சிக்கலைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. குறிப்பாக வைட்டமின் டி, சர்க்கரை, மாவுச்சத்து அதிகம் உள்ளன. செரிமானசக்தியை அதிகரிப்பது, ஆஸ்துமாவை மட்டுப்படுத்துவது, மார்பக புற்று நோயைத் தடுப்பது, ரத்த அழுத்தத்தை சீராக வைப்பது, சிறுநீரகச் செயல்பாட்டுக்கு உகந்தது.

பருத்தி, மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யும் மானாவாரி பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் திராட்சை சாகுபடியென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாகும். இருந்தும் நக்கசேலம் அருகேயும், பாடாலூரிலும் பல வருடங்களுக்கு முன்பு ஒருவர் மட்டும் பன்னீர் திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு சேலம், பெங்களூரு, திருச்சி, திண்டுக்கல், தேனி பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்வதால் மட்டுமே இன்பம் கிடைத்து வந்த நிலையில், எசனையில் தினம் தினம், சாகுபடி செய்யும் இடத்திற்கே நேரில் சென்று வாங்கிச்செல்வது வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் சுருளிராஜன் என்ற பெருமாள் (47). இவர் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில், அரசலூர் கைகாட்டி எதிரே சாலையை ஒட்டி தனது வயலில் அரை ஏக்கர் பரப்பளவில் கொடி வகையான பந்தல் அமைத்து பன்னீர் சாகுபடி செய்துள்ளார். வேரழுகல் நோய், சாம்பல் நோய் தாக்காமல் மருந்து தெளித்து, வாராவாரம் தண்ணீர் பாய்ச்சி 15 மாதங்கள் பராமரித்தால் திராட்சை அறுவடைக்கு தயாராகி விடுகிறது.

இதற்காக சுருளிராஜன் துறையூர் தாலுகா எரக்குடி பகுதியில் விதைகளை வாங்கி வந்து பயிரிட்டுள்ளார். 15 மாதம் கழித்து அறுவடைக்கு தயாராகும் பன்னீர் திராட்சை அடுத்த 4 மாதத்திற்கு ஒருமுறையும் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் வாகனங்களில் பயணிப்போர் அனைவருக்கும் பார்க்கும் போதே பரவசத்தை ஏற்படுத்துவதால் இறங்கி பன்னீர் திராட்சையை வாங்கி செல்வதோடு பழங்களுக்கிடையே புகுந்து போட்ேடா எடுத்து கொண்டும் செல்வது வழக்கமாகியுள்ளது. கிலோ ரூ.120க்கு விற்று வருகிறார். பந்தலுக்கே வந்து பலரும் பர்சேஸ் செய்வதால் ஏற்றுமதிக்கு எந்த வாய்ப்புமே இல்லாமல் போனதாக சுருளிராஜன் தெரிவித்தார்.

Tags : Perambalur , Grape cultivation, rainforest ,Perambalur
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...