×

14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் அறிகுறி தெரிந்தால் பரிசோதனை: விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: நாடு முழுவதும் 61 நாட்களுக்கு பிறகு இன்று உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. இந்நிலையில், தமிழகம் வரும் விமான பயணிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு...

* பயணிகள் தங்களது உடல்வெப்ப நிலையை அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்தில் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
* நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
* வீடு இல்லாத பயணிகள் தமிழக அரசு அங்கீகரித்த ஹோட்டலில் 14 நாட்கள் பணம் செலுத்தி தங்க வேண்டும்.
* 14 நாட்களில் ஏதேனும் அறிகுறி தெரிந்தால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும்.
* பயணிக்கு அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

* பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், அறிகுறி மாறி மாறி வந்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்.
* பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், லேசான அறிகுறி இருந்தால், வீட்டில் அல்லது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுவார்.
* பரிசோதனையில் கொரோனா இல்லைவிட்டால், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
* விமானம் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் தமிழக இ-பாஸ் வலைத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
* தவறான தகவல் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* காய்ச்சல், இருமல் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
* ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களையும் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும், வீட்டு முகவரி, தொடர்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும்
* தாங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வரவில்லை என்பதற்கான உறுதியை  தர வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்போர் மற்றும் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விமானத்தில் பயணிக்க முடியாது.
* விமானநிலையத்தில் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக குறியீடுகள் வரைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அனைத்து பயணிகளின் கைகளிலும் குவாரன்டைன் என அழியாத மை மூலம் சீல் வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Flight Passengers ,Government of Tamil Nadu , 14 days of isolation The Government of Tamil Nadu has issued guidelines for flight passengers
× RELATED நாடு முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகளை...