×

மகாராஷ்டிராவில் பாதிப்பு 50,000-ஐ தாண்டியது; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.38 லட்சமாக உயர்வு; 4021 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்    இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக அதிகரித்துள்ளது. கடந்த  24 மணிநேரத்தில் மட்டும் 6,977 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால்  இதுவரை 4021 பேர் உயிரிழந்த நிலையில், 57,721 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,635 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,600 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 16,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8324 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 14,056 பேருக்கு தொற்று    உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 858 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6412 பேர் குணமடைந்துள்ளனர்.  

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 378 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 55 பேர் குணமடைந்தது.
பீகாரில் 2587 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 702 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 238 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 186 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 252 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 67 பேர் குணமடைந்தது.

கோவாவில் 66 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 19 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 13,418 பேருக்கு பாதிப்பு; 261 பேர் பலி; 6540 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 1184 பேருக்கு பாதிப்பு; 16 பேர் பலி; 765 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 191 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 165 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 847 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 521 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 7028 பேருக்கு பாதிப்பு; 163 பேர் பலி; 3848 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 370 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 148 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 52 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 32 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 14 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 1336 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 550 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 41 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2060 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 1898 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 317 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 58 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 2089 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 654 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 1621 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 809 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1854 பேருக்கு பாதிப்பு; 53 பேர் பலி; 1090 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 3667 பேருக்கு பாதிப்பு; 272 பேர் பலி; 1339 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2823 பேருக்கு பாதிப்பு; 56 பேர் பலி; 1856 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 6665 பேருக்கு பாதிப்பு; 290 பேர் பலி; 3408 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 6268 பேருக்கு பாதிப்பு; 161 பேர் பலி; 3538 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 203 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 63 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Tags : Maharashtra ,India , The impact in Maharashtra exceeds 50,000; Coronavirus in India rises to 1.38 lakh 4021 people killed
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...